மக்களின் தீர்ப்பை ஏற்பதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும், மக்களுக்காக உழைப்பதில் பாஜக என்றும் பின்வாங்கியது இல்லை எனவும், மக்களின் தீர்ப்பை ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தாமரை மலராது என்று கூறியவர்களுக்கு மத்தியில், சட்டமன்றத்தை பாஜக உறுப்பினர்கள் அலங்கரிப்பார்கள் என்ற சபதத்தை நிறைவேற்றி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
20 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜகவை சேர்ந்தவர்கள் சட்டப்பேரவைக்குள் நுழைய இருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர், பாஜக உறுப்பினர்களின் அனுபவம், தொலைநோக்கு சிந்தனை, ஆற்றல் தமிழக மக்களுக்கு பெரிதும் பயன்படும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.