“தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும்”: எல்.முருகன்

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள் கடந்த சில…

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தார். இந்த நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெறும் என திமுகவினர் தோல்வி பயத்தில் கூறி வருவதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் மகளிர் ஓட்டுகள் அதிமுகவிற்கும் பாஜகவிற்குமே கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.