தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் 5ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் கொரோனா பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். ஆனால் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்தது, இந்த கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அறிவித்தன. ஆளுநர் உரைக்குப் பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து, சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. அதில் அலுவல் ஆய்வுக் குழு உறுப்பினர்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். ஆலோசனைக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் தனபால், வரும் வெள்ளிக்கிழமை வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் என தெரிவித்தார்.