ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக சட்டமன்ற செயலகம் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டமன்றச் செயலகம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த ஜனவரி 4-ம் தேதி…

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டமன்றச் செயலகம் அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த ஜனவரி 4-ம் தேதி காலமானார். கடந்த 2021ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதன்முறையாக களமிறங்கிய திருமகன் ஈவேரா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

திருமகன் மறவையொட்டி நேற்று சட்டமன்ற கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று மீண்டும் சட்டமன்றம் கூடியது. தற்போது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியை சட்டமன்ற செயலகம் காலியானதாக அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர், தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளார்.

அடுத்த 6 மாதங்களுக்குள்ளாக இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.