முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

விஜய், அஜித் படம் திரையிடப்பட்ட திரையரங்கில் நேரிட்ட தீ விபத்தால் பரபரப்பு!

ஈவிபி சினிமாஸ் திரையரங்கில் வாரிசு பட கொண்டாட்டத்தின் போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஹுலியம் கேஸ் பலூனில் பட்டாசு வெடித்த போது, அதில் நெருப்புப்பட்டு பலூன் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய், அஜித் ஆகிய இருவரின் திரைப்படங்களான வாரிசு மற்றும் துணிவு இன்று ஒரே நாளில் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் படம் வெளியானது முதலே இருவரது ரசிகர்களும் கட்அவுட் பேனர் வைத்தும், பட்டாசு வெடித்தும், பாலாபிஷேகம் செய்தும்
உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வகையில் இன்று காலை 11 மணி அளவில் சென்னை பூந்தமல்லியை அடுத்த
திருமழிசை பகுதியில் இயங்கி வரும் ஈவிபி சினிமாஸ் என்ற திரையரங்கில் விஜய், அஜித் ரசிகர்கள் கட் அவுட்டிற்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திரையரங்கத்தின் வெளியே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஏ டி எம் கேஸ் பலூன் மீது கொண்டாட்டத்திற்காக வெடிக்கப்பட்ட பட்டாசு எதிர்பாராத விதமாக பட்டதில், கேஸ் பலூன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

அப்போது உடனடியாக சுதாரித்துக் கொண்ட விஜய் ரசிகர்கள், யாருக்கும் காயங்கள் ஏற்படாதவாறு உடனடியாக அங்கிருந்து அனைவரையும் அப்புறப்படுத்தினர். பின்னர் இரு ரசிகர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட ஏ டி எம் கேஸ் பலூனைஅங்கிருந்து வெளியேற்றினர்.

இதனையடுத்து துணிவு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர்களும் , விஜய் ரசிகர்களும் ஒன்றாக இணைந்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படமால் துரிதமாக செயல்பட்டு அனைவரையும் வெளியேற்றியதோடு, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றியதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது உக்ரைன்

G SaravanaKumar

பிரான்ஸ் அதிபரின் செல்போனும் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்

Gayathri Venkatesan

பெண்கள் முன்னேறினால்தான் நாடு முன்னேறும்- பிரதமர் மோடி

Web Editor