முக்கியச் செய்திகள் தமிழகம்

சட்டமன்றத் தேர்தல் எப்போது நடைபெறும்: தலைமைத் தேர்தல் ஆணையர் பதில்!

வாக்களிக்கும் நேரத்தை ஒரு மணிநேரம் நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு 2 நாட்களாக சென்னையில் ஆலோசனை நடத்தியது. அரசியல் கட்சிகள், தலைமைச் செயலாளர், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களோடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கொரோனா காலத்தில் பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்த வேண்டி உள்ளதால், சமூக இடைவெளியை பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பெண்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள் செய்யப்படும் எனவும், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களே தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவர் எனவும் சுனில் அரோரா தெரிவித்தார். 80 வயதை கடந்தவர்களுக்கான தபால் வாக்கு முறையை சில கட்சிகள் வரவேற்றுள்ளதாகவும், 80 வயதுக்கு மேற்பட்டோருக்கான தபால்வாக்கு முறை பீகார் தேர்தலில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறினார்.

பள்ளி, கல்லூரி தேர்வுகள், விழாக்களை கருத்தில்கொண்டு தமிழக தேர்தல் தேதி முடிவு செய்யப்படும் என கூறிய சுனில் அரோரா, ஏப்ரல் 4வது வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமென்பது அதிமுகவின் கோரிக்கை மட்டுமே எனவும், தேர்தலின்போது பண விநியோகத்தில் ஈடுபட்டு வழக்கு பதியப்பட்டோர் விவரம் ஆணையத்திடம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.


தேர்தலில் பண பலத்தை தடுக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தினோம் எனவும் கூறிய அவர், “ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுமா என்பது, தேர்தல் தேதி அறிவிக்கும் நாளன்று தெரிய வரும். மே 24ஆம் தேதிக்குள் நிச்சயமாக தமிழகத்தில் தேர்தல் நடத்தப்பட்டு விடும். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சிறப்பாக நடத்தி முடிக்கப்படும். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் சட்டமன்ற தேர்தலுடன் நடத்தப்படும்” எனக் கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

‘கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்’; செயல்படுத்த குழு அமைத்து அரசாணை வெளியீடு

Halley karthi

கார்களில் வைக்கப்படும் சிறிய குப்பைத் தொட்டி!

அதிமுக ஆட்சியின் குளறுபடியால் வரி வருவாய் தடைபட்டுள்ளது: அமைச்சர் எ.வ.வேலு

Ezhilarasan

Leave a Reply