சசிகலாவின் சொத்துகளை முடக்குவதில் அரசியல் உள்நோக்கம் இல்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் தங்கும் விடுதிக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதனை, கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலா வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அதிமுக தொண்டர்கள் இல்லை என குறிப்பிட்டார். சசிகலாவின் சொத்துக்கள் முடக்கப்படுவது மத்திய அரசின் நடவடிக்கை என்றும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
சசிகலா சொத்துகளை முடக்குவதில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.







