முக்கியச் செய்திகள் தமிழகம்

மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டம்; தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.

சென்னையில் இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ள கமல்ஹாசனுக்கு கட்சி நிர்வாகிகள் பாராட்டுக்களை தெரிவித்தனர். கட்சி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கான அதிகாரம் கமல்ஹாசனுக்கு அளிக்கப்படுவதாக பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

மேலும் பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணை விரைந்து நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். டாஸ்மாக் கடைகள் இருக்கும் ஊர்தோறும் தரமான இலவச குடிநோயாளிகள் மறுவாழ்வு மையங்கள் உடனே திறக்கப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

ஏழு தமிழர் விடுதலையில் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்காமல் ஒருவருக்கொருவர் சுழற்றி விட்டு அரசியல் செய்வது ஏமாற்றமளிப்பதாகவும், தமிழக அரசு அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. தமிழக அரசு வாங்கியுள்ள கடன்களைப் பற்றிய வெள்ளை அறிக்கையை தேர்தலுக்கு முன்னரே மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தம்பிதுரை மீதான வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Ezhilarasan

சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி நடிகர் தனுஷ் வழக்கு; நாளை விசாரணை

Halley karthi

தொற்று குறைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்?

Vandhana

Leave a Reply