முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் 11.36 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது: சுகாதாரத்துறை செயலாளர்

தமிழ்நாட்டில் 11 லட்சத்து 36 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசியை மக்கள் நீண்ட வரிசையில் நின்று செலுத்தி வருகின்றனர். மற்ற மாநிலங்களை விட அதிக மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அதிகளவு தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு  மத்திய தொகுப்பில் இருந்து 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று வந்து சேர்ந்தது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கிற்கு வந்த தடுப்பூசிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 11 லட்சத்து 36 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்தார். கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள் என பல்வேறு தரப்பினருக்கு கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகக் கூறிய அவர், கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளதாகவும், 150 KL மட்டும் தான் ஆக்சிஜன் தேவையாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பின்னர் தடுப்பூசி சேமிப்பு கிடங்கிலிருந்து மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உடலில் ஆயுதங்களால் தாக்கி கொள்ளும் வினோத வழிபாடு

G SaravanaKumar

ஆஸ்கருக்கு செல்லும் குஜராத்தி படம் குறித்து இயக்குநர் பார்த்திபன் ட்விட்

Web Editor

நாடாளுமன்ற சிறப்புரிமையை சிபிஐ மீறியுள்ளது: கார்த்தி சிதம்பரம்

Mohan Dass