இயற்கை எரிவாயு பேருந்துகளை இயக்க முதலமைச்சர் அறிவுறுத்தல்

இயற்கை எரிவாயு மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை இயக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட…

இயற்கை எரிவாயு மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை இயக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இரயில்வே திட்டங்கள் மற்றும் விமான நிலைய திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் குறித்தும், சுற்றுச்சூழல் மாசினை குறைத்திடும் வகையில், டீசலுக்கு பதிலாக மாற்று எரிசக்தி மூலம் அதாவது மின்கலன், இயற்கை எரிவாயு மற்றும் திரவ இயற்கை எரிவாயு மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை இயக்குதல் குறித்தும், எண்ணெய் நிறுவனங்கள் மூலமாக போக்குவரத்துத் கழகங்களுக்கு சொந்தமான இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை மையங்கள் அமைப்பது குறித்தும், அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டடங்களின் மேற்கூரைகளில் சூரியமின் தகடுகளை அமைத்து, மின்சாரம் உற்பத்தி செய்வது குறித்தும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

ஆய்வுக் கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.