100% தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரி விரைவில் மாறும் : தமிழிசை

புதுச்சேரி மாநிலம் விரைவில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலமாக மாறும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மங்கலம் தொகுதிக்கு உட்பட்ட மேல்சாத்தமங்கலம் அரசு தொடக்கப் பள்ளியில்,…

புதுச்சேரி மாநிலம் விரைவில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலமாக மாறும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் மங்கலம் தொகுதிக்கு உட்பட்ட மேல்சாத்தமங்கலம் அரசு தொடக்கப் பள்ளியில், இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் தற்போது வரை 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி உள்ளதாகக் கூறினார். விரைவில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரி மாறும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.