முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை; வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை ஆனது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் ஈரோடு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில்,  டிசம்பர் 10 மதியம் வரை படிப்படியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் எனவும் இன்று மணிக்கு 55 கிலோ மீட்டர் முதல் 75 கிலோமீட்டர் வரையிலான காற்று மதியம் வரையில் வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மதியத்திற்கு மேலாக 30 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வேகம் குறைய தொடங்கும். வட தமிழ்நாடு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மலையும் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கும் வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வென்னிமலை முருகன் கோயிலில் மாசித்திருவிழா

Syedibrahim

கர்ப்பிணி மகளை சுட்டுக்கொன்ற தந்தைக்கு போலீஸ் வலைவீச்சு!

Gayathri Venkatesan

குவைத்தில் 12,000 பேர் வேலையிழக்கும் அபாயம்; மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

G SaravanaKumar