சென்னை மாமன்ற கூட்டத்தில் முதன்முறையாக ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து!

சென்னை மாமன்ற கூட்டத்தில் முதன் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா ராஜன் தலைமையில் இன்று கூடியது. மாநகராட்சி தொடர்பான பிரச்னைகளை விவாதிக்க ஒவ்வொரு…

சென்னை மாமன்ற கூட்டத்தில் முதன் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா ராஜன் தலைமையில் இன்று கூடியது. மாநகராட்சி தொடர்பான பிரச்னைகளை விவாதிக்க ஒவ்வொரு மாதமும் மாமன்ற கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த பிப்ரவரி மாதத்திற்கான மாமன்ற கூட்டம் இன்று கூடியது.

இதையும் படிக்கவும்: மதுரையில் தப்பியோடிய ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்

இன்றைய கூட்டம் முதன்முறையாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தொடர்ந்து, திருக்குறள் மற்றும் தீண்டாமை உறுதிமொழி எடுக்கப்பட்டது. 100 ஆண்டுகள் கண்ட வரலாற்று சிறப்பு மிக்க சென்னை மாமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவது இதுவே முதல் முறை. கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் மதிமுக உறுப்பினர் ஜீவன் மாமன்ற கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.


அதனை ஏற்றுக் கொண்ட மேயர் பிரியா ராஜன் இனிமேல் மாமன்ற கூட்டம் தமிழ்த்தாய்
வாழ்த்துடன் தொடங்கும் என கடந்த மாத கூட்டத்தில் அறிவித்தார். அதன் படி இன்றைய
கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

இன்றைய கூட்டத்தில் கடந்த 16-ம் தேதி மறைந்த 122வது வார்டு உறுப்பினர் ஷீபா வாசுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றபட்டது. மாமன்ற உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்து பேசினர். தொடர்ந்து துணை மேயர் மகேஷ் குமார், மாமன்ற உறுப்பினர்கள் பதவி காலத்தில் இருக்கும் போது உயிரிழந்தால் ஒரு லட்சம் வழங்கப்படும் என்பதை மாற்றி சிறப்பு தீர்மானமாக ரூ.5 லட்சமாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். துணை மேயர் வைத்த கோரிக்கை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்தார். தொடர்ந்து கூட்டத்தில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் மாமன்றத்தின் இன்றைய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகிறது என்றும் அடுத்த மார்ச் 2ம் தேதி கூட்டம் நடைபெறும் என்றும் மேயர் பிரியா அறிவித்தார். நிறைவாக கூட்டத்தில் தேசிய கீதமும் முதன்முறையாக பாடப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.