என்எல்சி இந்தியா நிறுவனம் புதியதாக தேர்வு செய்துள்ள 299 பொறியாளர்களின்
ஒருவர் கூட தமிழகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்…
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனை உறுதி செய்யும் விதத்தில் அவ்வப்போது பல்வேறு நிகழ்வுகளும் வெளியாகின்றன. அதன்படி, கடந்த 2019 செப்டம்பர் மாதம் மதுரை ரயில்வே கோட்ட அளவில் நடைபெற்ற தேர்வில் 90 சதவீதம் பேர் வட மாநிலத் தலைவர் என்றும், ஐ .சி.எப். ரயில்வே தொழிற்சாலையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு நியமிக்கப்பட்ட1,765 பேரில் 1600 பேர் வட மாநிலத்தவர், இதேபோல கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் தபால் துறையில் நடைபெற்ற தேர்வான 946 பேரில் 46 பேர் மட்டுமே தமிழர்கள் என மதுரை எம்பி வெங்கடேசன் உள்ளிட்டோர் அதற்கான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர்.
நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் பிற மாநிலங்களைச் சேர்ந்த 299 பொறியாளர்கள்
நியமிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியானது பல்வேறு தரப்பில் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பிற மாநிலங்களைச் சேர்ந்த 299 பேர் பொறியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதில், ஒன்றில் கூட தமிழரை நியமிக்காததாக என்.எல்.சி.யின் செயல் கடும் கண்டனத்திற்குரியது
என தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பிற மாநிலத்தவர் நியமிக்கப்பட்டது தமிழர்களிடையே கடும்
அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தொழில்
வளர்ச்சிக்காகவும், மின் தேவைக்காகவும் சுமார் 65 ஆண்டுக்கு முன்
என்.எல்.சி.க்கு ஏழை மக்கள் நிலம் வழங்கியவர்கள், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்ற உறுதிமொழியை என்.எல்.சி. நிறைவேற்றவில்லை எனவும், நிலம் கொடுத்தவர்கள் தற்காலிகப் பணியாளர்களாகவும், பிற மாநிலத்தவர்களை நிரந்தரப் பணியாளராக நியமிப்பது கண்டிக்கத்தக்கது எனவும் எதிர்ப்புகள் வலுக்கும் நிலையில், திறமையான மாணவர்கள் இருக்கிற தமிழ்நாட்டை முற்றிலுமாக என்.எல்.சி.புறக்கணித்துள்ளது நியாயமற்ற செயல் எனவும், மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தமிழர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்படுகிறது
இது தொடர்பாக ஆளும் கட்சியினர் முதல்வர் மத்திய அரசுக்கு இது தொடர்பாக கடிதம்
எழுதி உள்ளதாகவும், இதில் உரிய நடவடிக்கையை அவர் மேற்கொள்வார் என தெரிவிக்கும் நிலையில், என்எல்சி நிர்வாகமோ, தகுதி அடிப்படையில் GATE தேர்வின் மூலமாகவே குறிப்பிட்ட இடங்களுக்குள்ளாக தேர்ச்சி பெறுபவர்கள் பணியிடங்களைப் பெறுகின்றனர் எனவும், அப்படி தேர்வான299 பேர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை எனத் தெரிவிக்கின்றனர். இதில் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.
-ம.பவித்ரா








