மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு அட்டையை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள அரசு மனநல காப்பகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதிய காப்பீடு அட்டைகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:
228 ஆண்டுகள் கடந்த ஒரு பழமையான அமைப்பு கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகம். கீழ்பாக்கம் அரசு மனநல காப்பாகத்தில் புதிய கட்டிடம் மற்றும் புதிய ஆராய்ச்சி மையத்தை மேம்படுத்த 40 கோடி ரூபாய் இந்த மனநல காப்பகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றார் மா.சுப்பிரமணியன்.
முன்னதாக, ஒப்பியாய்டு மாற்று சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் மா சுப்பிரமணியன்.
நிகழ்ச்சியில் மேயர் பிரியா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் செந்தில் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்பு.








