விரைவில் தமிழ் நெட் எனும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில், கிராமங்களுக்கு இணைய வசதி ஏற்படுத்தும், பாரத் நெட் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் கையெழுத்தானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், பாரத்நெட் திட்டம் மூலம், 12,525 கிராம ஊராட்சிகளையும், கண்ணாடி இழை கம்பி வடம் மூலம் இணைத்து, அதிவேக அலைக்கற்றை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், 1815.32 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், திட்டத்தின் 3 மற்றும் நான்காம் தொகுப்பு பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டதாகவும், விரைவில் தமிழ் நெட் எனும் திட்டம் செயல்பாட்டிற்கு வரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசு அலுவலகங்கள் , பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிவேக இணையதள சேவையினை பெற முடியும் என்றும், இத்தகைய சேவைகளை வழங்குவதன் மூலம் , ஊரக வேலைவாய்ப்பு மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடைய இத்திட்டம் வழி வகுக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.