முக்கியச் செய்திகள் தமிழகம்

அர்ச்சகர்களை நியமிப்பதற்கு இடைக்கால தடை கிடையாது: உயர்நீதிமன்றம்

கோயில்களில் அர்ச்சகர்களை நியமிப்பதற்கு இடைக்கால தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான இந்து சமய அறநிலையத்துறையின் புதிய விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 18 வயதில் இருந்து 35 வயதுக்குட்பட்டவர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட விதிகளுக்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அர்ச்சகர்கள் நியமனம் நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு தொடர்பாக எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தது. மேலும், வழக்கு தொடர்பாக 4 வாரத்தில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்

Halley karthi

செப்.10ல் வெளியாகிறது சந்தானத்தின் ‘டிக்கிலோனா’

Halley karthi

கோவை ஹோட்டல் தாக்குதல் விவகாரத்தில் மாவட்ட காவல் ஆணையருக்கு நோட்டீஸ்!

Halley karthi