நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் 2022 வரை, மக்களவையில் உள்ள 39 தமிழக எம்.பி-க்களும், மாநிலங்களவையில் உள்ள 18 தமிழக எம்பி-க்களும் அவரவர் பணியை எவ்வாறு செய்துள்ளனர்? என்ன மாதிரியான சாதனைகளை புரிந்துள்ளனர்? எத்தனை விவாதங்களில் பங்கேற்றுள்ளனர்? இதில் அதிக விவாதங்களை எழுப்பியது யார்? போன்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.
நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்னைக்காகவும், தொகுதி , மாநிலம் மற்றும் தேசிய பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பதற்கு எதுவாகவும், மக்களாலும், கட்சிகளின் பெரும்பான்மை மூலமாகவும் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் இருந்து மக்களவையில் 39 உறுப்பினர்களும் , மாநிலங்களவையில் 18 உறுப்பினர்களும் என தேர்தெடுக்கப்பட்டு, பணியாற்றி வருகின்றனர். இதில் தமிழகத்தில் இருந்து கடந்த 2022-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் மட்டும் 05 உறுப்பினர்கள் ஓய்வு பெற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் உறுப்பினர்கள் அவையில் தறாமல் கலந்து கொண்டு தங்கள் தொகுதி, மாநிலம் மற்றும் தேசிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கலாம். இதுதவிர விவாதங்கள், தனியார் மசோதா மற்றும் கேள்விகள் மூலம் தங்கள் வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளலாம். ஒட்டு மொத்த பிரச்சனைகளையும் மக்களவையில் எடுத்துக்கூற வாய்ப்பு அளிக்கபடுகிறது.
பூஜ்ய நேரம் என்ப்படும் (Zero Hour) நேரத்தில் அனைத்து எம்.பிக்களும் தங்கள் பிரச்சனைகளை நேரடியாக பேசலாம். இதில் உறுப்பினர்கள் தாங்களே தயாரித்து பேசுவது அல்லது பிறர் பேசியதை வழிமொழிவது என இருவகையாக வகைப்படுத்திக்கொள்ளலாம்.
ஒவ்வொரு கூட்டத்தொடர் முடிந்ததும், பிரைம்பாயிண்ட் ஃபவுண்டேஷன், பி.ஆர்.எஸ் இந்தியா அளிக்கும் தரவுகளின்படி, பாரளுமன்ற உறுப்பின்ர்கள் ஆற்றிய பணிகளை ஆயுவு செய்து அறிக்கை வெளியிடுகிறது. அது தவிர , ஒவ்வொரு ஆண்டும், அகில இந்திய அளவில் சிறந்த பணியாற்றிய உறுப்பினர்களுக்கு சன்சத் ரத்னா (Sansad Ratna Award) விருது வழங்கி கவுரவிக்கிறது. கடந்த 12 ஆண்டுகளில், 86 சிறந்த உறுப்பினர்கள அகில இந்திய அளவில் கவுரவிக்கப்ப்ட்டு இருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தொடர் முடிந்ததும், பிரைம் பாயிண்ட் பவுண்டேஷன்,பிஆர்எஸ் இந்தியா அளிக்கும் தரவுகளின்படி உறுப்பினர்கள் ஆற்றிய பணிகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுகிறது.
அதன்படி உலக அளவில், நமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு , அவர்களின் பாராளுமன்ற செயல்பாடுகளின் அடிப்படையில் சிவில் சமூகத்தால் வழங்கப்படும் ஒரே விருதாகும். இது இந்தியா புக் ஆஃப் ரிகார்ட்ஸால் அங்கீகரிக்ப்பட்டுள்ளது. 2014க்கு பிறகு, தமிழ்நாட்டிலிருந்து எவரும் இந்த விருதை பெறவில்லை என்பது வருத்தமான ஒன்று.
தமிழகத்தில் முதலிடம்:
தமிழ்நாட்டு எம்.பிகளில் தருமபுரி மாவட்டம், திமுகவை சேர்ந்த டாக்டர் செந்தில் குமார் 453 புள்ளிகளுடன் (சுய முயற்சி விவாதங்கள் + தனியார் மசோதா + கேள்விகள்) தமிழ்நாட்டில் முதலிடத்தில் இருக்கிறார். அகில இந்திய அளவில் 17ம் இடத்தில் இருக்கிறார். கடந்த குளிர் கால கூட்டத்தொர் 2021ல், அகில் இந்திய அளவில் இவர் 25ம் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பத்தக்கது.
தமிழ் நாட்டில், தென்காசி எம்.பி திரு தனுஷ் குமார் 409 புள்ளிகளுடன் இரண்டம் இடத்தில் இருக்கிறார். திரு செந்தில் குமார், திரு தனுஷ் குமார் இருவரும் முறையே 384 மற்றும் 375 கேள்விகள் எழுப்பி தமிழ்நாட்டில் கேள்விகள் பிரிவிலும் முதல் இரண்டு இடத்தை பெற்றுள்ளனர் . இருவருமே இதுவரை 100 சதவிகித அமர்வுகளில் பங்கேற்று பணியாற்றி
உள்ளனர். திரு தனுஷ் குமார் அகில இந்திய அளவில் 29ம் இடத்தில் இருக்கிறார்.
அகில் இந்திய அளவில் திருமதி சுப்ரியா சுலே (என்.சி.பி – மகாரஷ்டிரா) 652 புள்ளிகளுடன் முதல் இடமும், திரு ஷீரங் அப்பா பார்னே (சிவசேனா – மாகாராஷ்டிரா) , 573 புள்ளிகளுடன் இரண்டம் இடம் பெறுகிறார்.
விவாதங்கள்
தேனி எம்.பி திரு ரவீந்திரநாத் இதுவரை 97 சுய முயற்சி விவாதங்களில் (Initiated debates) பங்கேற்று தமிழக எம்.பிக்களில் விவாதங்களில் முதலிடம் பெறுகிறார். இவர் 246 புள்ளிகள் (விவாதங்கள் + தனியார் மசோதா + கேள்விகள்) தமிழ்நாட்டில் பெற்று இருக்கிறார். 62 சதவிகித அமர்வுகளில் பங்கேற்றுள்ளார்.
அகில இந்திய அளவில் திரு அதிர் ரஞஜன் சவுதரி (மேற்கு வங்கம்) 199 சுய முயற்சி விவாதங்களில் பங்கேற்று முதலிடத்திலும், திரு என்.கே. பிரேம சந்திரன் (கேரளா) 189 சுய முயற்சி விவாதங்களில் பங்கேற்று இரண்டாம் இடத்திலும் இருக்கிறார்கள்.
தனிநார் மசோதாக்கள்
சென்னை தெற்கு எம்.பி திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் 8 தனி நபர் மசோதாக்களை அறிமுகம் செய்து தமிழ் நாட்டு எம்.பிக்களில் தனி நபர் மசோதா பிரிவில் முதலிடம் பெறுகிறார். இவர் 274 புள்ளிகள் (விவாதங்கள் + தனியார் மசோதா + கேள்விகள்) தமிழ்நாட்டில் பெற்று இருக்கிறார். 80 சதவிகிர அமர்வுகளில் பங்கேற்றுள்ளார்.
அதில இந்திய அளவில், திரு கோபால் சின்னய்ய ஷெட்டி (பி.ஜே.பி, மாகாரஷ்டிரா) 17 தனிநபார் மசோதாக்கள் தாக்கல் செய்து இந்த பிரிவில் முதலிடம் இருக்கிறார்.