நாசாவின் காலண்டரில் இடம்பெற்ற தமிழ்நாட்டு மாணவியின் ஓவியம்

நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள 2022-23ம் ஆண்டுக்கான காலண்டரில் பழனியைச் சேர்ந்த மாணவி வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான ‘நாசா’ சார்பில் ஒவ்வொரு ஆண்டும் காலண்டர்…

நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள 2022-23ம் ஆண்டுக்கான காலண்டரில் பழனியைச் சேர்ந்த மாணவி வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான ‘நாசா’ சார்பில் ஒவ்வொரு ஆண்டும் காலண்டர் வெளியிடுவது வழக்கம். அதன்படி, 2022-23ஆம் ஆண்டு காலண்டருக்கான போட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியில் உலகளவில் லட்சக்கணக்கான குழந்தைகள் கலந்து கொண்ட நிலையில், திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த, தனியார் பள்ளியில் பயிலும் 6ஆம் வகுப்பு மாணவி தித்திகா என்பவர் வரைந்த ஓவியம் 2022-23ஆம் ஆண்டுக்கான காலண்டரில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.

ஓவியம் வரைந்து சாதனை படைத்த மாணவிக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நான்காவது முறையாக இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் ஓவியங்கள் நாசா விண்வெளி காலண்டரில் இடம்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.