முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழகம், தமிழ்நாடு இரண்டும் ஒன்று தான் என தெரியாமல் முதல்வர் பேசுகிறார் – பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன்

தமிழகம் என்றாலும் தமிழ்நாடு என்றாலும் இரண்டும் ஒன்று தான், அந்த வித்தியாசம் தெரியாமல் முதல்வர் பேசி வருவதாக பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்சம் மதிப்பீட்டில் தச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் 2021முதல் இதுவரை 15 கோடிக்கும் மேல் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வகுப்பறை கட்டிடங்கள் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது, திறக்கப்பட்டுள்ளது என கூறினார்.

மேலும், மத்திய அரசின் கேந்திர வித்தியாலயா பள்ளி நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் அடுத்த ஆண்டு வர இருக்கிறது. ஈரோடு தேர்தல் குறித்து 2 கட்சித் தலைமைகளும் பேசி முடிவெடுக்கும்.கூட்டணிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தேர்தல் நேரத்தில் ஒன்று சேர்ந்து பணியாற்றுவோம் என தெரிவித்தார்.

அத்துடன், ஆளுநர் அவர் பணியைச் சிறப்பாகவே செய்து வருகிறார். நீட் தேர்வில் எந்த ரகசியமும் இருக்காது. சேது சமுத்திரம் புதிய திட்டம் குறித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் என கூறினார்.

மேலும், தமிழகம் என்றாலும் தமிழ்நாடு என்றாலும் இரண்டும் ஒன்று தான், அந்த வித்தியாசம் தெரியாமல் முதல்வர் பேசி வருகிறார். தமிழகத்தில் பாஜக நாடாளுமன்றத் தேர்தல் பணியைத் துவக்கி விட்டதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், சேது சமுத்திரம் புதிய திட்டம் குறித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஆனால் அந்த பகுதியில் உள்ள நீரோட்டத்தின் காரணமாக அங்கு கட்டிடங்கள் ஏதும் கட்டமுடியாது என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்துவிட்டது.

தமிழகத்தில் பாஜக நாடாளுமன்றத் தேர்தல் பணியைத் துவக்கி விட்டோம். இன்று வரை பாஜக அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறது. இளைஞர்கள் டாஸ்மாக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். டாஸ்மாக் நேரத்தைத் தமிழகத்தில் குறைக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். கஞ்சா கடத்தி வருபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆட்டோ ஓட்டுநர் குத்திக் கொலை; சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

G SaravanaKumar

கழிவறை இல்லாததால் காதல் திருமணம் செய்த பெண் உயிரிழப்பு !

Halley Karthik

இன்று முதல் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு அனுமதி

G SaravanaKumar