தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13ம் தேதி தொடங்கும் நிலையில் அன்றைய தினமே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில், சட்டப்பேரவையில் வரும் 13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இந்தத் தகவலை சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் இன்று அறிவித்துள்ளார்.
2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் 13ம் தேதி தொடங்கும் எனவும் அன்றை ய தினமே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் 17ம் தேதி தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
Advertisement: