முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

அசுர வளர்ச்சியில் ஓடிடி தளங்கள்.. தியேட்டர்களுக்கு பாதிப்பா?

இந்தியாவில் பெயரளவில் இருந்த ஓடிடி தளங்களுக்கு அதிக ஆக்சிஜன் கொடுத்து உயிர்பிழைக்க வைத்தது கொரோனா தொற்று. இந்தத் தொற்றால், மொத்த நாடும் ஊரடங்கில் முடங்கிய நேரத்தில், ஓடிடி தளங்களை தேடத் தொடங்கினார்கள் டைம்பாஸ் ரசிகர்கள்!

அப்படியே அதற்குள் விழுந்ததில் சில த்ரில்லர் தொடர்கள், தில்லாக ஹிட்டாக, ஓட்டி தளங்களில் த்ரில்லர் எண்ணிக்கை திக்குமுக்காட வைத்தது. பிறகு ஒன்று இரண்டு சின்ன பட்ஜெட் படங்களை வாங்கிய, தளங்கள், முன்னணி ஹீரோ படங்களுக்கு வலை வீசத் தொடங்கின. அதற்காக அதிக பணம் கொடுக்கவும் துணிந்தன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வட்டிக்கு வட்டி என பெட்டிக்குள் முடங்கிய படங்களை, விற்றுதான் பார்ப்போமே என ஓடிடி-க்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள் தயாரிப்பாளர்கள். எதிர்பார்க்காத லாபமும் ரசிகர்களின் வரவேற்பும் தயாரிப்பாளர்களை மகிழ்விக்க, தொடர்ந்து ஓடிடி-க்கு படங்களை கொடுக்க தயாரானார்கள்.

மாநில மொழிகளை விட இந்தி திரைப்படங்கள் அதிக எண்ணிக்கையில் ஓடிடியில் வெளியாக தொடங்கின. பின்னர் ஆரம்பத்தில் பதுங்கிய ஓடிடி தளங்கள், தியேட்டர்களை போலவே தடாலடி காட்டத் தொடங்கின. அதாவது சின்ன பட்ஜெட் படங்களை வாங்காமல், தவிர்க்கத் தொடங்கின. இதனால் எப்படியாவது, ஏதாவது ஒரு தளத்தில் படங்களை விற்றுவிடலாம் என நினைத்த தயாரிப்பாளர்கள் மீண்டும் மவுனம் காக்கத் தொடங் கினார்கள்.

இதற்கிடையே ஓடிடி தளங்களே, பிரத்யேக தொடர்களை பெரிய ஹீரோ, ஹீரோயின்களை வைத்து தயாரிக்க தொடங்கின. அதற்கு வரவேற்பும் கிடைத்துள்ளன. இந்நிலையில், ஓடிடி தளங்களின் வளர்ச்சி ஜிவ்வென உயர்ந்து வருகிறது என்கிறார்கள். கடந்த 2020 ஆம் வருடத் தில் ஓடிடி சந்தை மதிப்பு சுமார் 12 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக இருந்த நிலையில் அடுத்த 10 வருடங்களில் இதன் மதிப்பு, சுமார் ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள்.

தற்போது அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் ஆகிய முன்னணி தளங்கள் இருந்தாலும் புதிதாக சோன் லிவ், ஜீ5, ஈராஸ் நவ், பாலாஜி உட்பட பல புதிய தளங்களும் களத்தில் குதித்திருக்கின்றன. இன்னும் புதிய ஓடிடி தளங்கள் உருவாகும் என்கிறார்கள்.

தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன்

இந்த தளங்களின் அசுர வளர்ச்சி காரணமாக, தியேட்டர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்கிற பேச்சுகளும் வெளி வரத்தொடங்கி இருக்கின்றன, சினிமா துறையில்.

உண்மைதானா? இதுபற்றி பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பனிடம் கேட்டபோது, ’எத்தனை ஓடிடி தளங்கள் வந்தாலும் தியேட்டர்களுக்கு பாதிப்பு வராது. டி.வி.வந்தபோதும் இப்படித்தான் சொன்னார்கள். எது வந்தாலும் தியேட்டர்களை அழிக்க முடியாது. எப்போதும் நல்ல திரைப்படங்கள் தியேட்டர்களில் ஓடிக்கொண்டுதான் இருக்கும். சரியில்லாத படங் களை ஓடிடி தளங்களும் நிராகரிக்கத்தான் செய்யும். இது எப்போதும் நடக்கும். ஆனால், அதிக எண்ணிக்கையிலான இருக்கைகள் கொண்ட தியேட்டர்களுக்கு பதிலாக, குறைந்த எண்ணிக்கையிலான தியேட்டர்கள் – அதாவது 250 பேர் அமரும் அளவிலான தியேட்டர்கள் வர வாய்ப்பிருக்கிறது’ என்றார்.

ஏக்ஜி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மத்திய அரசால் தமிழகம் முன்னேறுகிறது: முதல்வர்

எல்.ரேணுகாதேவி

கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

Gayathri Venkatesan

“எனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யமாட்டேன்” – பொள்ளாச்சி ஜெயராமன்

Gayathri Venkatesan