தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 515 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2,079 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனாவால் 25 லட்சத்து 35 ஆயிரத்து 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து 2 ஆயிரத்து 743 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 24 லட்சத்து 73 ஆயிரத்து 781 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 724 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் புதிதாக 150 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 139 பேர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளனர்.
கோவையில் 220 பேருக்கும் செங்கல்பட்டில் 118 பேருக்கும் ஈரோட்டில் 128 பேருக்கும் சேலத்தில் 142 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்த பட்சமாக பெரம்பலூரில் 9 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்றுப் பாதிப்பால் 21 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏதும் இல்லை.








