முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் புதிதாக 1,891 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,891 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 440 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,891 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனாவால் 25 லட்சத்து 41 ஆயிரத்து 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து 2 ஆயிரத்து 423 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 24 லட்சத்து 81 ஆயிரத்து 201 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 809 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 138 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 142 பேர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப் பட்டுள்ளனர். 2 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் 183 பேருக்கும் செங்கல்பட்டில் 102 பேருக்கும் ஈரோட்டில் 141 பேருக்கும் சேலத்தில் 119 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

தமிழகத்தின் அடுத்த டிஜிபி சைலேந்திரபாபு?

Halley karthi

சுற்றுலா தலங்களை வெவ்வேறு கோணங்களில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: மதிவேந்தன்!

Vandhana

தெற்காசியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்: முதலமைச்சர்

Ezhilarasan