நாடு முழுவதும் 4,300க்கும் அதிகமானோர் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து குறைந்து வருகின்றது. தற்போது 3,03,90,687 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி பாதிப்பு ஏறத்தாழ 40 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்நிலையில், கருப்பு பூஞ்சை தொற்றால் 4,300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுவரை 45,374 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இவற்றில் பாதிக்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இந்த தொற்று கண், மூக்கு பகுதிகளை பாதிக்கின்றது. சில நேரங்களில் மூளையையும் பாதிக்கின்றது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 12 முதல் 18 நாட்களுக்குள் இந்த தொற்று ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஸ்டிராய்டு மருந்து காரணமாக பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. மேலும், ஸ்டிராய்டு கொரோனா பாதிப்புகளை குறைத்தாலும், உடலின் நோயெதிர்ப்பு திறனை பாதிக்கின்றது. இது சர்க்கரை நோயாளிகளையும் பெரிதளவில் பாதிக்கின்றதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கருப்பு பூஞ்சை நோயால் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு மாநிலங்களில் மட்டும் இதுவரை 1,785 பேர் இந்த நோயால் உயரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.