முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழக அரசியல் உணர்ச்சி வளர்ச்சி பாதையில் செல்லவில்லை – கார்த்தி சிதம்பரம் பேட்டி

தமிழக அரசியல் உணர்ச்சி கவர்ச்சியை நோக்கியே செல்வதாகவும், வளர்ச்சிப்பாதையில் செல்லவில்லை என்றும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

 

சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், பிரதமர் மோடி குருபூஜைக்கு வருவதை வரவேற்கிறேன் என்றும் வரும்போது 95% முடிந்துவிட்டதாக கூறும் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை பார்த்துவிட்டுவந்தால் நன்றாக இருக்கும் என்றும் விமர்சனம் செய்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

ராகுல் காந்தி நடைபயணம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அவரது நடைபயண முன்னெடுப்பு எல்லா வகையிலும் பலம் சேர்க்கும் என தெரிவித்தார். முதலமைச்சரின் கருத்து அவரது உட்கட்சி குறித்த கருத்து அதில் கருத்து கூற விரும்பவில்லை என தெரிவித்த அவர், தமிழக அரசியல் உணர்ச்சி, கவர்ச்சியை நோக்கியே செல்கிறது. வளர்ச்சிப்பாதையில் செல்லவில்லை என கூறினார்.

திராவிட முன்னேற்ற கழகம் என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முழுமையாக ஏற்றுக்கொண்ட இயக்கம். பழுத்த அரசியல்வாதிகளுக்கு மேடையில் எவ்வாறு பேச வேண்டும் என்பதை தான் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

பாகிஸ்தானுக்கு ராணுவத்தை அனுப்ப சீனா முயற்சி

Mohan Dass

மகளிர் அரசியலைப் புரிந்துகொள்ளவே 50% இட ஒதுக்கீடு – அமைச்சர் பொன்முடி

Web Editor

விருதுநகரில் ரூ.2,000 கோடி செலவில் ஜவுளி பூங்கா: 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் – எல்.முருகன் பேச்சு

Web Editor