இசையமைப்பாளராக அறிமுகமாகும் மிஷ்கின்; டெவில் படத்தின் புதிய அப்டேட்

’சவரக்கத்தி’ படத்தின் இயக்குநருமான ஆதித்யா இயக்கும் ’டெவில்’எனும் திரைப்படத்தில் முதன்முறையாக மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். தமிழ் திரைத்துறையில் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக வலம் வருபவர் மிஷ்கின். அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு,…

’சவரக்கத்தி’ படத்தின் இயக்குநருமான ஆதித்யா இயக்கும் ’டெவில்’எனும் திரைப்படத்தில் முதன்முறையாக மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

தமிழ் திரைத்துறையில் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக வலம் வருபவர் மிஷ்கின். அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் எனத் தமிழ் திரைத்துறைக்கு வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் ட்ரெண்ட்செட்டர் இயக்குநர்களில் ஒருவரானார்.

தமிழ் சினிமாவில் இயக்குநராக மட்டுமின்றி திரைக்கதை எழுத்தாளர், நடிகர், பாடகர் என மிஷ்கின் பல அவதாரங்களையும் ஏற்கனவே எடுத்துள்ளார். இந்நிலையில், தனது உடன்பிறந்த தம்பியும், ’சவரக்கத்தி’ படத்தின் இயக்குநருமான ஆதித்யா இயக்கும் ’டெவில்’எனும் திரைப்படத்தில் முதன்முறையாக மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

மாருதி பிலிம்ஸ் R இராதாகிருஷ்ணன் மற்றும் S.ஹரி சார்பில் ‘டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்’ P.ஞானசேகர் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகும், இப்படம் அறிவிக்கப்பட்ட போதே, ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியது. ரசிகர்களை இருக்கை நுணியில் கட்டிப்போடும் புதுமையான திரில்லராக ‘டெவில்’ திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ ஆகியோருடன் இயக்குநர் மிஷ்கின் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. எனவே படத்தின் டீசர் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.