ஆசிய மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ்நாடு வீரர்கள் – முறையான வழிகாட்டுதல் இல்லை என குற்றச்சாட்டு!

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆசிய மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் அலைக்கழிக்கப்படதாகக் கூறி  போட்டியில் கலந்து கொள்ள முடியாமல்  வீரர்கள் நாடு திரும்பினர். பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆசிய மாஸ்டர்…

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆசிய மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் அலைக்கழிக்கப்படதாகக் கூறி 
போட்டியில் கலந்து கொள்ள முடியாமல்  வீரர்கள் நாடு திரும்பினர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆசிய மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு முறையான வழிகாட்டுதல் இல்லாததால் அங்கு போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.  இதனால் பிலிப்பைன்ஸ் சென்றும் போட்டியில் கலந்துகொள்ள முடியாத விரத்தியில் வீரர்கள் நாடு திரும்பினார்.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் வீரர்கள் கூறுகையில், 

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆசிய மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு சென்று விட்டு இப்போது வந்திருக்கிறோம்.  அனைத்து வயது பிரிவிலும் போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்தோம்.  35 வயது பிரிவில் துவங்கி 85 வயது பிரிவு வரை கலந்து கொள்வதற்காக எங்களின் சொந்த செலவில் இந்தியா சார்பாக விளையாடுவதற்காக சென்றிருந்தோம்.

நவம்பர் 8-ம் தேதி இந்த போட்டிகள் துவங்கியது.  இந்த விளையாட்டில் கால அட்டவணை ஒரு வாரத்திற்கு முன்பு வழங்கி விடுவார்கள்.  அதன் அடிப்படையில் 7-ம் தேதி அங்கு சென்று அடைந்தோம். எங்களை அங்கிருந்து அழைத்துச் செல்ல வேண்டிய வண்டி வருவதில் காலதாமதம் ஏற்பட்டது.  மூன்று இருந்து  நான்கு மணி நேரத்திற்கு மேலாக அங்கேயே காத்திருந்தோம்.

இதையும் படியுங்கள்:இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்த சீமான்! – உடல் நலம் குறித்து விசாரித்தார்!

இரவு 11 மணியளவில் மைதானத்தை அடைந்தோம்.  முதல் போட்டி 45 வயது
உட்பட்ட பிரிவு எட்டாம் தேதி மாலை 3 மணிக்கு என அட்டவணையில்
குறிப்பிடப்பட்டிருந்தது.  நாங்கள் அனைவரும் எட்டாம் தேதி காலை 10:30 மணிக்கு
சென்றோம்.

ஆனால், ஒன்பது மணிக்கு போட்டி முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. போட்டி கால அட்டவணையில் மாற்றங்கள் செய்ய முடியாது,  இருப்பினும் போட்டியை
முடித்து வெற்றி அறிவித்ததால் இது குறித்து நாங்கள் விளையாட்டு போட்டிகளை
நடத்துபவர்களிடம் கேட்டபோது ஏழாம் தேதி அளவில் உங்களுடைய நாட்டின் பிரதிநிதிகளுக்கு மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தோம்.

அதில் இந்தியா சார்பாக யாரும் கலந்து கொள்ளவில்லை. அதில் செய்யப்பட்ட மாற்றங்கள் உங்களுக்கு தெரிய வரவில்லை என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது எனக் கூறினர்.

இந்த நிலையில் 1 லட்சம் மேல் செலவு செய்து சென்றது இழப்பானது. இதுகுறித்து இந்தியாவைச் சார்ந்த பிரதிநிதியிடம் கேட்டபோது,  இது போட்டி ஏற்பாடு செய்தவர்களின் தவறு என கூறினார்கள் .

என்ன செய்வது போட்டி ஏற்பட்டாளர்கள் தவறு செய்து விட்டார்கள், இன்னும் சில
சமயங்களில் இப்படித்தான் நடக்கும் என சாதாரணமாக இந்திய பிரதிநிதிகள் கூறினார்.

இவ்வாறு அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.