இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்த சீமான்! – உடல் நலம் குறித்து விசாரித்தார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆர்.நல்லக்கண்ணுவை  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகியும்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆர்.நல்லக்கண்ணுவை  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.

சுதந்திர போராட்ட தியாகியும்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆர்.நல்லக்கண்ணு  இருமல்,  காய்ச்சலால் அவதிப்பட்டார்.  இதையடுத்து,  நல்லகண்ணுவைப் பரிசோதித்த மருத்துவர்கள்,  அவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு இருப்பதாகத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.  பொதுப்பிரிவு மருத்துவர்கள்,  நுரையீரல் துறை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.  பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

இதையும் படியுங்கள்:வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. வெளுக்கும் கனமழை..

அதனை தொடர்ந்து,  நல்லகண்ணுவின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.  மருத்துவமனையில்  சிகிச்சை முடிந்து வீடு திரும்பி   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆர்.நல்லக்கண்ணுவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும்,  திரைப்பட இயக்குநர் களஞ்சியமும் நேரில் சந்தித்தனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும்,  இயக்குநர் களஞ்சியமும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுவை நேரில் சந்தித்து அவரின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.