முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மிகவும் பின் தங்கியுள்ளது! – மு.க.ஸ்டாலின்

முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மிகவும் பின் தங்கியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கடலூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபைக்கூட்டம் பாதிரிக்குப்பம் பகுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஸ்டாலின், அதிமுகவை…

முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மிகவும் பின் தங்கியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

கடலூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபைக்கூட்டம் பாதிரிக்குப்பம் பகுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஸ்டாலின், அதிமுகவை நிராகரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், கிராம சபைக் கூட்டம் வருடத்திற்கு நான்கு முறை நடத்தப்பட வேண்டும் என்றார். ஆனால் அதிமுக ஆட்சியில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வில்லை என்பதால் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திமுக சார்பில் கிராம சபையை நடத்தி வருவதாகக் கூறினார்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு பல்வேறு மாநிலங்களும் எதிர்த்து வரும் நிலையில், அந்த சட்டத்தை ஆதரித்து விவசாயிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி துரோகம் இழைப்பதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply