புதிய அரசியலை உருவாக்குவோம்! – மநீம தலைவர் கமல்ஹாசன் மக்களுக்கு அழைப்பு!

புதிய அரசியலை உருவாக்குவோம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுற்று சூழல் பற்றி பேசும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம்…

புதிய அரசியலை உருவாக்குவோம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுற்று சூழல் பற்றி பேசும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் கட்சி எனவும், ஏரி – கண்மாய்கள் ஆகியவை நமது சொத்துக்கள் என்றும், அவற்றை மாசுபடுத்துவோரை தண்டிக்க சட்டங்கள் இயற்ற வேண்டும் என்றும் கூறினார். மேலும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், நெகிழி உற்பத்தி குடிசைத்தொழிலாக மாற்றப்படும் எனவும் கமல் தெரிவித்தார்.

தொடர்ந்து எடப்பாடியில் பிரச்சாரம் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் பிரச்சாரத்தின்போது திரண்டு வரும் கூட்டம் ஒரு சினிமா ஹீரோவை பார்ப்பதற்காக வரும் கூட்டம் அல்ல என்றார். அரசியலில் தாம் செல்லும் பாதை சரியானது என்பதை ஆமோதிக்க வரும் கூட்டம் என்றும் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்தார்.

நாமக்கல்லில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், தமிழகத்தை சீரமைப்பதில் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு எனக்கூறினார். மற்றவர்களை குறை கூறுவதை நிறுத்தி விட்டு புதிய அரசியலை உருவாக்குவோம் என மக்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு விடுத்தார்.

இதனிடையே, தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி  ஏ.ஜி.மவுரியா  தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்க, தேர்தல் ஆணையம் தரப்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டதால், வழக்கு பிப் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply