முக்கியச் செய்திகள் தமிழகம் வணிகம்

பசுமை பண்ணை கடைகள் மூலம் தக்காளி விற்பனை: அமைச்சர் தகவல்

விலை உயர்வை கட்டுப்படுத்த, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் கடும் பாதிப்புக்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், வெளிச்சந்தையை விட குறைந்த விலையில் தக்காளி உள்பட காய்கறிகளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தக்காளி உள்பட அனைத்து விதமான காய்கறிகளும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவத்தார்.

வெளிச்சந்தையில் தற்போது, 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் தக்காளி, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 85 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என்றும், இதற்காக தினசரி 15 மெட்ரிக் டன் தக்காளி கொள்முதல் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement:
SHARE

Related posts

பிரபல நடிகை பரபரப்பு புகார்: சீரியல் நடிகர் அதிரடி கைது

Gayathri Venkatesan

அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருந்தது: ஓ.பன்னீர்செல்வம்

Halley karthi

ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Ezhilarasan