தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒவ்வொரு மாதமும் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் உட்பட பல்வேறு மத்திய அமைச்சர்களை அலுவல் ரீதியாக சந்தித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை 6.05 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு
சென்றார்.
மூன்று நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர் தமிழ்நாடு சார்ந்த பல்வேறு
விவகாரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாநில நிலவரம் தொடர்பாக மாதம் தோறும் ஆளுநர் தரப்பில் அளிக்க வேண்டிய
அறிக்கைகளையும் பயணத்தின் போது சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.







