தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி சென்றார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, கடந்த 18-ம் தேதி பதவியேற் றார். மத்திய உளவுத் துறையில் பணியாற்றிய ஆர்.என்.ரவி, தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட் டோரும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அவர் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆளுநராகப் பதவியேற்றதும் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.என்.ரவி, அரசியலமைப்புச் சட்டப்படி செயல்படுவேன் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை டெல்லி புறப்பட்டார்.
தமிழக ஆளுநராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக அவர், டெல்லி சென்றுள்ளார். 2 நாட்கள் டெல்லியில் தங்கியிருக்கும் அவர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்துப் பேச இருப்பதாக கூறப்படுகிறது.







