திருப்பதி ஏழுமலையானை வழிபட வரும் பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டதற் கான சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப் பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக திருப்பதி கோயிலில் இலவச தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது. தொற்று குறைந்து வருவதால் கடந்த 8ஆம் தேதி முதல் சித்தூர் மாவட்ட மக்களுக்கு மட்டும் தினமும் 2 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தொற்று குறைந்து வருவதால், கடந்த 20ஆம் முதல் அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசனத்திற்கான டோக்கன்களை 8 ஆயிரமாக உத்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பதால் இலவச தரிசன டோக்கன் களையும் ஆன்லைனில் வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி வரும் பக்தர்கள் இனிமேல் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்கள் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என அறிவித்துள்ளது. 25-ஆம் தேதி முதல் இலவச தரிசன டோக்கன்களை ஆன்லைனில் பக்தர்களுக்கு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.