தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையைச் சமாளிக்கும் வகையில், வெளிச்சந்தையில் இருந்து 4,500 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் டெண்டர் கோரியிருந்தது. இதன்படி, அக்டோபர் 12-ஆம் தேதி முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை மின்சாரம் கொள்முதல் செய்யத் திட்டமிட்ட நிலையில் குறிப்பாக, மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான உச்ச மின் தேவை நேரத்தில் 3,000 மெகாவாட் மின்சாரமும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரையிலான நேரத்தில் 1,500 மெகாவாட் மின்சாரமும் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டது.
இந்த நிலையில், மின்சாரக் கொள்முதலுக்கான விலை யூனிட் ஒன்றுக்கு 31.99 ரூபாய் முதல் 37 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, ஒரு யூனிட் மின்சாரத்தைச் சராசரியாக 35 ரூபாய் விலையில் தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது.




