‘வாக்குத் திருட்டு’ விவகாரம், தோ்தல் ஆணைய முறைகேடுகள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவிவிலகல்,போராட்டக்காரா்கள் மீதான காவல் துறையின் அடக்குமுறை, ஜனநாயக உரிமைகள் ஒடுக்கப்படுவது குறித்து கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரி டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் இருந்து உச்சநீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணியாக சென்றுள்ளனர். இதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்..
ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் எதிர்க்கட்சிகள், இளைஞர்கள், சமூக அமைப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்தியா கூட்டணி கட்சியினரின் பேரணியில் திரளாக பலர் பங்கேற்றுள்ளனர்.




