தமிழக முதலமைச்சர் விஜய் இன்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்திப்பதற்காக விஜயவாடா சென்றார். இதற்காக சென்னை நீலாங்கரையில் இருந்து காரில் புறப்பட்ட முதலமைச்சர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் ஆந்திரா புறப்படார். தொடர்ந்து விஜயவாடா விமான நிலையம் சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் அங்கிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள கிருஷ்ணா நதிக் கரையில் இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள கனக துர்கை அம்மன் கோயிலுக்குச் சென்றார். அங்கு முதல்வர் விஜய்க்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் அங்கு சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்திக்கும் முதல்வர் விஜய், பின்னர் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணைச் சந்தித்துப் பேசுகிறார்.




