தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான புதிய அரசு ஆட்சி அமைந்துள்ள நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,
சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ஜெ.குமரகுருபன், வணிக வரித்துறை செயலாளராக நியமனம்.
சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலாளர் ஜி.பிரகாஷ், வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையராக நியமனம்,
எழுதுபொருள் அச்சுத்துறை ஆணையர் வி.ஷோபனா ஜவுளித்துறை ஆணையராக நியமனம்.
வணிக வரித்துறை செயலாளராக இருந்த ஷில்பா பிரபாகர் சதிஷ் தொழிலாளர் துறை ஆணையராக நியமனம்.
போக்குவரத்து, சாலை பாதுகாப்பு ஆணையர் கிரண் குர்ராலா, நகரமைப்புத்துறை ஆணையராக நியமனம்.
விடுப்பிலிருந்து திரும்பிய கே.விஜயகார்த்திகேயன், மீன்வளத்துறை இயக்குநராக நியமனம்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் தலைவர், மேலாண் இயக்குநராக கார்த்திகேயன் நியமனம்.
சேலம் மாநகராட்சி ஆணையராக லலிதாதித்யா நீலம் நியமனம்.
கைத்தறித்துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், சமூக நலத்துறை இயக்குநராக நியமனம்.
கரூரிலிருந்து மாற்றப்பட்ட ரவிக்குமார், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்.
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக எஸ்.ஏ.ராமன் நியமனம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







