பஹ்ரைனில் தமிழ்நாடு மீனவர்கள் கைது… மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் #MKStalin கடிதம்!

பஹ்ரைனில் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 மீனவர்களை…

Tamil Nadu fishermen arrested in Bahrain... Chief Minister #MKStalin's letter to Union Minister Jaishankar!

பஹ்ரைனில் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 மீனவர்களை விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான, சட்ட உதவிகள் மற்றும் தூதரக உதவிகளை வழங்கிட வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரை கிராமத்தைச் சேர்ந்த 28 மீனவர்கள் ஈரான் நாட்டிற்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில், அங்கு எல்லை தாண்டிச் சென்றதாக பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரால் கடந்த 11-9-2024 அன்று கைது செய்யப்பட்டனர்.

பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரின் இந்த கைது நடவடிக்கையின் காரணமாக, மீனவர்களது வருமானத்தை மட்டுமே நம்பியுள்ள அவர்களது குடும்பத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான சட்ட உதவிகள் மற்றும் தூதரக உதவிகளை உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.