தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்களின் விவரங்கள் வெளியீடு…!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிக்கான மையங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் வாக்குப்பதிவு 85 சதவீதத்தை தொட்டது. இதுவரை தமிழ் நாட்டில் நடைபெற்ற தேர்தல்களிலேயே இது தான் அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும்.

தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில்  மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்கான முன்னேற்பாடுகள் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி

மதுரை –   5

சேலம் ,கடலூரில் –  4

தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளுர், சென்னை, விழுப்புரம்  மாவட்டங்களில் – 3

கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஈரோடு, திருச்சி  –  2

காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, அரியலூர், திருப்பூர், தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை –  1

என மொத்தம் 62 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.