தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு ட்ரில்லியனாக மாறுவது நிச்சயம் என தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நாணயம் விகடன் வழங்கும், பிஸ்னஸ் ஸ்டார் 2021ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் மற்றும் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனையடுத்து தொழில்துறையில் பல சாதனைகளைப் படைத்த ஆளுமைகளுக்கு பல்வேறு தலைப்புகளில் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. குறிப்பாக நாணயம் விகடன் 2021 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிக்கு வழங்கப்பட்டது. அதேபோல், சிறந்த வர்த்தக அறிவுரையாளர் விருது, கன்பெடரேஷன் ஆப் இந்தியன் இண்டஸ்ட்ரி-க்கு (Confedaration of Indian Industry) வழங்கப்பட்டது. இதனையடுத்து பிசினஸ் பீனிக்ஸ் விருது எம்.சி.ஆர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. மேலும் எம்சிஆர் நிறுவனத் தலைவர்களான எம்.சி.ராபின் மற்றும் எம்.சி ரிக்சன் சகோதரர்கள் விருது பெற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தகுதி பெற்றவர்களுக்குத் தகுதியான விருதுகளை நாணயம் விகடன் வழங்கியுள்ளதாகவும் கூறி விருது பெற்றவர்களை பாராட்டி வாழ்த்தினார். பின்னர் தமிழ்நாட்டில் ஒன் ட்ரில்லியன் பொருளாதாரம் நிச்சயம் சாத்தியம் எனக் கூறிய அவர், அந்த கனவை நோக்கி முதலமைச்சர் செயல்பட்டு வருவதாகவும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்து வருவதாகத் தெரிவித்தார். பின்னர் அமைச்சருக்கு விகடன் குழும தலைவர் ஶ்ரீனிவாசன் நினைவு பரிசு வழங்கினார்.