முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டிற்கு என்எல்சி இனி தேவையில்லை! – அன்புமணி ராமதாஸ் பேட்டி

தமிழ்நாட்டிற்கு என்எல்சி நிறுவனம் தேவையில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நெய்வேலி என்.எல்.சி. நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.கணேசன் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில், புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காத நிலையிலும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கலந்து கொண்டார். விவாசாயிகளின் நலனுக்காக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனம் தேவை இல்லை. அதை நான் கடிதம் மூலம் கொடுத்துள்ளேன். இந்த நிறுவனங்களால் அப்பகுதியில் பொதுமக்களுக்கு அதிகமாக உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. என்.எல்.சி நிறுவனம் அப்பகுதியில் வருவதற்கு முன்பு நிலத்தடி நீர் 08 அடியில் இருந்தது. தற்போது 1000 அடியில் இருக்கிறது.

1989 வரை தான் என்எல்சி நிறுவனம் மூலம் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு நிரந்தர வேலை கொடுத்துள்ளார்கள். பிறகு ஒருவருக்கு கூட நிரந்தர வேலை கொடுக்கவில்லை. தற்காலிகமான வேலை தான் கொடுத்துள்ளார்கள். மொத்தம் 09 சுரங்கங்கள் உள்ளது. அதில் கடலூர் மாவட்டத்தில் ஏழு சுரங்கங்களும், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் தலா ஒரு சுரங்கமும் இருக்கிறது. இதில் மூன்று சுரங்கங்கள் நடைமுறையில் இருக்கிறது.

நான் சட்டமன்றத்தில் கேள்வி கேட்டதற்கு நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை என்று முதலமைச்சர் தெரிவித்தார். 06 சுரங்கம் காவிரி டெல்டா பகுதிகளில் வருகிறது. ஐந்து சுரங்கங்கள் திட்டமிட்ட பகுதிகளில் வருகிறது. வீராணம் பகுதியில் புதிய நிலக்கரி திட்டத்திற்கு அனுமதி கொடுக்க கூடாது என்றும், மேலும் 06 சுரங்கம் தோண்டுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கக் கூடாது என்று நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம்.

தற்போது வரை 13,000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி உள்ளார்கள். மேலும் 1,40,000 ஏக்கர் நிலத்தை அப்பகுதியில் உள்ள மக்கள் தரமாட்டோம் என்கிறார்கள். மொத்தமாக 1,50,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நினைக்கிறார்கள். பொதுமக்கள் நிலங்களை தரமாட்டோம் என்று கூறினால், அப்பகுதியில் உள்ள ஆட்சியர்கள், காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கொடுக்க வேண்டும் என பொதுமக்களை கட்டாயப்படுத்துகின்றனர்.

இதையும் படியுங்கள் : காதல் முறிவுக்குப் பின் நட்பா? நான் நட்பைக் கேட்கவில்லை – டென்ஷனான நாக சைதன்யா…..

இது நெய்வேலி பிரச்னை இல்லை. தமிழ்நாட்டின் பிரச்னை. ஒவ்வொரு ஏக்கரும் நமக்கு முக்கியமானது. வரும் காலங்களில் விவசாயம் முக்கியமான ஒன்று. என்எல்சி நிறுவனம் கடந்த 66 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. எங்கள் கோரிக்கை அப்பகுதியில் நிலங்களை கையகப்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும். புதிய ஆறு சுரங்கங்கள் தோண்ட அரசு அனுமதிக்க கூடாது. எங்களுடைய நோக்கம் அப்பகுதியில் உள்ள மக்களை காப்பாற்றுவது தான்.

எல்.எல்.சி நிறுவனம் இனி தேவை இல்லை. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரமே போதுமானது. என்.எல்.சி நிறுவனம் தரும் மின்சாரம் தேவையில்லை. நெல் தரும் பூமியை அழிக்கக் கூடாது. எங்களுக்கு இன்னும் வெற்றி கிடைக்கவில்லை. நாங்கள் சொன்ன கோரிக்கைகளை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டால் தான் எங்களுக்கு வெற்றி. நம்முடைய கடமை நல்ல காற்று, நல்ல நீர் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும். பொதுமக்களின் நிலங்களை கையகப்படுத்துவது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்.

 

அரசு ஒரு நல்ல முடிவை தரவில்லை என்றால் பின்னர் நாங்களே களத்தில் இறங்கி போராட்டம் செய்வோம். அப்பகுதி மாவட்ட ஆட்சியர் ஒரு ஆட்சியராக செயல்படவில்லை. விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். வேளாண்மை பாதுகாப்பு துறை அமைச்சர் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். இப்படி விவசாயத்தை அழிக்கக் கூடாது. நான் எப்பொழுதும் இயற்கை பக்கமும் தமிழ்நாடு பக்கம் தான். இந்த ஆலோசனை கூட்டம் தாமதமாக தொடங்கியது. ஒரு நிலத்திற்கு இழப்பீடு கொடுப்பது ஒரு தாயை விற்பதற்கு சமம். இது போன்ற நிகழ்வு நடைபெற்றால் அடுத்த தலைமுறைக்கு சாப்பாடு கிடைக்காது” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram