“தமிழ்நாடு முதலமைச்சர் 300 ஏக்கர் நிலத்தை கொடுக்க வேண்டும்”- ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக முதலமைச்சர் 300 ஏக்கர் நிலத்தை கொடுக்க வேண்டும். இதை அவர் வியாபாரமாக பார்க்காமல், அண்டை மாநில வளர்ச்சியாக பார்க்க வேண்டும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை…

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக முதலமைச்சர் 300 ஏக்கர் நிலத்தை கொடுக்க வேண்டும். இதை அவர் வியாபாரமாக பார்க்காமல், அண்டை மாநில வளர்ச்சியாக பார்க்க வேண்டும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு தலைமை பொதுமருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் குறைபாடு
இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு புகார் கூறி வந்த நிலையில் கடந்த 10
தினங்களுக்கு முன்பு பொதுமருத்துவமனையை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆய்வு செய்து பல்வேறு குறைபாடுகளை சரிசெய்ய அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் அனைத்தும் சரிசெய்யப்பட்டுள்ளதா என இன்று மீண்டும் மருத்துவமனைக்கு சென்று துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி அரசு மருத்துவ துறையை மேம்படுத்த மாதம் தோறும் கூட்டம் நடந்தப்படுகிறது. புதுச்சேரியில் 11 அறுவை சிகிச்சை மையங்கள் புதிதாக திறக்கப்பட உள்ளது. அதற்கு இயந்திரங்கள் வாங்கவும், புதிதாக 350 கருவிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு மருத்துவ நிபுணர்களுக்கு ஊதியம்உயர்த்தப்பட உள்ளது.

புதுச்சேரியில் தற்போது நிதி பற்றாகுறை இல்லை. அரசு நெடுநாட்களாக வரி ஏற்றவில்லை. அதற்காக தான் மத்திய அரசு, மாநில அரசு வருமானத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக வழி தெரியாமல் வரி உயர்த்த பட வேண்டிய சூழலில் அரசு உள்ளது. அது மக்களை பாதிக்காத அளவு இருக்கும் என்றார்.

மேலும் புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 300 ஏக்கர் நிலத்தை கொடுக்க வேண்டும். இதை அவர் வியாபாரமாக பார்க்காமல், அண்டை மாநில வளர்ச்சியாக பார்க்க வேண்டும். இதனால் தமிழக பகுதிகளான விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட புதுச்சேரி ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் பயனுள்ளதாக இருக்கும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.