துறை சார்ந்த அமைச்சர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை

பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2022-23-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதி நிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான…

பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2022-23-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதி நிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதன்தொடர்ச்சியாக துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை மறுதினம் முதல், மே மாதம் 10ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனையொட்டி, சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அண்மைச் செய்தி: ‘தமிழர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கடந்த நிதியாண்டில் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிதியாண்டின் மானியக் கோரிக்கையில் துறை வாரியாக அறிவிக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து துறை சார்ந்த அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.