‘தமிழர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’

இலங்கைக்கு பொருளாதார உதவிகளை அளித்து வரும் மத்திய அரசு, அங்குள்ள தமிழர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

இலங்கைக்கு பொருளாதார உதவிகளை அளித்து வரும் மத்திய அரசு, அங்குள்ள தமிழர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பேரழிவுக்கு ஆட்சியாளர்களின் தவறான கொள்கையே காரணம் என தெரிவித்துள்ள அவர், ஒரே நேரத்தில் 100% இயற்கை வேளாண்மைக்கு மாறியதால் நெல் உள்ளிட்ட உணவு தானியங்களின் உற்பத்தி பாதித்து, விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில், கைதான 4 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல்’

மேலும், மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி மேற்கொண்ட இலங்கை ஒப்பந்ததின்படி, வடக்கு-கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் எனவும் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இதேபோல, பொருளாதாரப் பிடியில் சிக்கிய இலங்கைக்கு, இந்தியா 7,600 கோடி ரூபாய் கடனுதவி செய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இலங்கையில் வசிக்கும் பூர்வீகத் தமிழர்கள் மற்றும் மலையக தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.