முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பாதிப்பா?

ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இன்சூரன்ஸ் மற்றும் இதர சேவைகளை வழங்கும் ECGC நிறுவனத்தின் சென்னை மண்டல அலுவலகம் பெங்களூர் மண்டல அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால், தமிழ்நாட்டிலுள்ள ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை, பல்வேறு நகரங்களில், உணவு, ஆடை, மருந்து, பல் வகை இயந்திரங்கள் என பலவிதமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. உலக வரைபடத்தில், தமிழ்நாட்டு பொருட்கள் சென்றடையாத நாடு என்று எதுவும் இல்லை. ஏற்றுமதியாகும் பொருட்களை, வெளிநாட்டில் பெற்றுக்கொண்ட இறக்குமதி நிறுவனம் உரிய தொகையை வழங்கவில்லை என்றால், இங்குள்ள நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

அப்போது ஏற்றுமதியாளர்களுக்கு கை கொடுப்பது. ECGC எனப்படும் இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகம் வழங்கும் Credit gurantee policy. இந்த பாலிசி மூலம் எடுத்தால் ஏற்றுமதி செய்த பொருட்களின் மதிப்புக்கான தொகை இழப்பீடாக நிறுவனத்திற்கு கிடைக்கிறது.

மத்திய அரசு நிறுவனமான இசிஜிசியின் தென் மண்டல அலுவலகம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்காக 63 ஆண்டுகளாக சென்னையில் செயல்பட்டு வந்தது. இந்த மண்டல அலுவலகம் சென்ற நிதி ஆண்டில் 170 கோடி ரூபாய் பிரீமிய வருவாயை ஈட்டியது.

அண்மைச் செய்தி: ‘தமிழர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரளா மாநிலங்களுக்கான தென் மண்டல அலுவலகம். கடந்த 20 ஆண்டுளாக பெங்களூருவில் செயல்பட்டு வருகிறது. இந்த மண்டலம். 4 மாநிலங்களுக்கும் சேர்த்து பிரிமிய வருவாயாக. 140 கோடி ரூபாயை மட்டுமே ஈட்டியது.

இந்நிலையில், ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சென்னையிலுள்ள இசிஜிசி மண்டல அலுவலகம், பெங்களூர் மண்டலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இனி தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவன கணக்குகளை கையாளும் வங்கிகளும் இனி நடைமுறை சிக்கல்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காலமும், பொருளும் விரயமாகும் என்கிறார், ஏ.எம்.எஸ்.ஜி அசோகன். ,தலைவர் – அரசன் குழுமம் மற்றும் CAPEXIL கூட்டமைப்பு நிறுவனங்கள்

”கிளைம் வந்தால் பெங்களூருக்கு செல்வது கடினம் சென்னை என்றால் கன்னியாகுமரியிலிருந்தும், தமிழ்நாட்டில் எங்கிருந்தாலும் சென்னைக்கு வந்து விடலாம். வேண்டுமென்றால் sandwich மாதிரி பெங்களூரு மண்டலத்தை சென்னை மண்டலத்துடன் இணைத்து அனைவருக்கும் சேவை செய்யலாம். மீண்டும் சென்னை அலுவலகம் தொடர வேண்டும்”

தமிழ்நாடு ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ள நிலையில்,, இந்த அலுவலகம் மாற்றப்பட்டதால் ஏற்றுமதியாளர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும் என்றும் கூறுகிறார் அசோகன்.

”குஜராத், மகாராஷ்டிரா அடுத்து ஏற்றுமதியில் தமிழ்நாடு மூன்றாமிடத்தில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிக அளவு ஏற்றுமதி நடைபெறும்போது ஏன் சென்னை மண்டலத்தை பெங்களூரூ மண்டலத்துடன் இணைத்தார்களோ தெரியவில்லை என்கிறார்”

எனவே, ECGC நிறுவனத்தின் வர்த்தகத்திற்கு பெரும் பங்களிப்பு வழங்கும் சென்னை மண்டல அலுவலகம் மீண்டும் சென்னையில் இயங்க வேண்டும் என்பதே ஏற்றுமதி நிறுவனங்களின் கருத்தாக உள்ளது

  • ரா.தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கிறது அதிமுக

Arivazhagan CM

மோடி அமைச்சரவை 2.0: புதிய அமைச்சர்களின் ‘கல்வி பின்னணி’

Niruban Chakkaaravarthi

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் -முதலமைச்சர் வாழ்த்து

Gayathri Venkatesan