தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 1 ரூபாயில் வரவு – செலவு குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.
இதையடுத்து, 2023–24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த உரையில் பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் மேம்பாட்டுதுறை, சுற்றுச்சூழல் மேம்பாடு என பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின.
இந்த பட்ஜெட்டில் ஒரு ரூபாயில் வரவு, செலவு குறித்து தற்போது பார்க்கலாம்….
ஒரு ரூபாயில் வரவு
அதன்படி, பொதுகடன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு 33 பைசாகளும், மற்ற கடன்கள் மூலம் 1 பைசாவும் கிடைக்கிறது. இதே போல், மத்திய அரசிடம் இருந்து பெறும் உதவி மானியங்கள் மூலம் 7 பைசாவும், மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் மூலம் 5 பைசாவும், மாநிலத்தின் சொந்த வரி மூலம் 44 பைசாவும் வருவாயாக கிடைக்கிறது.
ஒரு ரூபாயில் செலவு
இதே போல், கடனாக 3 பைசாவும், கடன்களை திருப்பி செலுத்த 11 பைசாகளும் செலவிடப்படுகின்றன. மேலும், சம்பளம் வழங்க 19 பைசாகளும், மூலதன செலவு 11 பைசாகளும், வட்டி செலுத்த 13 பைசாகளும், உதவித் தொகை- மானியங்களும் 30 பைசாகளும், ஓய்வூதியம் மற்றும் ஓய்வு கால பலன்களுக்கா 9 பைசாகளும், செயல்பாடுகளும், பராமரிப்புகளுக்கும் 4 பைசாகளும் செலவிடப்படுகிறது.







