ஆசிய போட்டியில் பதக்கங்களை குவித்த தமிழ்நாடு வீரர்கள் : சென்னையில் உற்சாக வரவேற்பு!

ஆசிய போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சீனாவின் ஹங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில்…

ஆசிய போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சீனாவின் ஹங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் வித்யா ராம்ராஜ் 3 பதக்கங்களும், 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் சுபா வெங்கடேசன் மற்றும் ராஜேஷ் வெள்ளி பதக்கமும், ட்ரிபிள் ஜம்பில் பிரவீன் வெண்கல பதக்கம் வென்றனர். இதனையடுத்து பதக்கங்களுடன் சென்னை திரும்பிய வீரர்க்ளுக்கு விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், ”ஆசிய விளையாட்டுப் போட்டியில் 3 பதக்கங்கள் வென்றது பெறும் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மற்ற நாடுகளில் சென்று விளையாடுவது ஒரு சிறந்த அனுபவத்தை தந்துள்ளது.

இதையும் படியுங்கள் : பீகாரில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து – 4 பேர் உயிரிழந்த நிலையில் மீட்பு பணி தீவிரம்..

அடுத்த போட்டியில் பி.டி.உஷா சாதனையை முறியடிப்பேன். இந்தியாவில் அனைவரும் கிரிக்கெட்டுக்கு மட்டுமே ஆதரவு தெரிவிக்கின்றனர். தடகள போட்டிக்கு ஆதரவு அளிப்பது குறைவாகவே உள்ளது. எனவே தடகள போட்டிக்கும் பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள, News7 Tamil – ன் WhatsApp Channel– ல் இணைய – க்ளிக் செய்யுங்கள்!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.