”தமிழக அரசு பள்ளிகளிலும் புதிய கல்வி கொள்கையை பின்பற்றுகின்றனர்” – மத்திய அமைச்சர்

கேந்திரிய வித்யாலயாவில் மட்டுமல்ல தமிழக அரசு பள்ளிகளிலும் புதிய கல்விக் கொள்கையை பின்பற்றுகின்றனர் என மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்துள்ளார். திருச்சி என்.ஐ.டி வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட…

கேந்திரிய வித்யாலயாவில் மட்டுமல்ல தமிழக அரசு பள்ளிகளிலும் புதிய கல்விக் கொள்கையை பின்பற்றுகின்றனர் என மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்துள்ளார்.

திருச்சி என்.ஐ.டி வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார், இன்று காலை கேந்திரிய வித்யாலாயாவில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திருச்சியில் உள்ள கேந்திரிய வித்யாலயாவுக்கு சென்று ஆய்வு நடத்தினேன். அங்கு புதிய கல்விக் கொள்கையை சிறப்பாக பின்பற்றுகின்றனர். அதே போல் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் புதிய கல்விக்  கொள்கையை பின்பற்றி வருகின்றனர்.

புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு சிறப்பாக பின்பற்றுகிறது. புதிய கல்வி கொள்கையை எதிர்க்கிறோம் என தெரிவித்தாலும் எழுத்துப்பூர்வமாக அவர்கள் எதிர்க்கவில்லை. மத்திய அரசு தமிழ்நாடு அதிகாரிகளை மிரட்டவில்லை. நாங்கள் நேர்மையாக வெளிப்படைத் தன்மையுடன் ஆட்சி செய்து வருகிறோம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும். திருச்சியிலும் எங்களின் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.